ஆன்மிகம்

ஆன்மிக செய்திகளை சுட சுட உங்களுக்கு தரும் ஒர் வலைத்தளம்

இறை வணக்கத்துக்கே உடல்

Flipkart.com
பருந்து ஆகாயத்தில் ஏழெட்டு மைல் உயரத்தில் பறக்கிறது. அதற்கு கூர்மையான கண்கள் உண்டு. அதனால், வெகு துõரத்தில் இருந்து இறந்த உடல்களைக் காண முடியும். கீழே கிடக்கும் ஒரு மாமிசத் துண்டை கண்டுபிடித்து உண்பதற்காக இந்த தகுதி அதற்கு வழங்கப்பட்டிருக் கிறது. அதுபோலவே நமக்கு உயர்ந்த கல்வித்தகுதிகள் இருக்கலாம். அதன் நோக்கம் என்ன? வேலைக்கு போக வேண் டும். சம்பாதிக்க வேண்டும் போன்ற புலன் இன்பத்திற்காக மட்டுமே. விண்வெளிக்கலன்களின் உதவியால் நாம் மிக உயரத்தில் பறக்கலாம். அதன் நோக்கம் என்ன? மனம் உள்ளிட்ட புலன்களின் திருப்திக்காக, சுயநலத்திற்காக.
ஆகவே, இந்த துயரமிக்க ஜடநிலைக்கு காரணமாயிருப்பது இந்த உடல் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே சமயத்தில் இந்த உடல் நிலையானதல்ல என்பதையும் அறிய வேண்டும். "நான், என் உடல், குடும்பம், சமூகம், நாடு' மற்றும் பலவற்றோடு நம்மை நாம் இனங்கண்டாலும் எவ்வளவு காலத்துக்கு இவையெல்லாம் நிலைத்து நிற்கும். அவை சாஸ்வதமானவை அல்ல.
இந்த உடல் பயனற்றது என்றாலும், அதைப் புறக்கணித்தும் விடக்கூடாது. இறையுணர்வை செயல்படுத்த நம் ஜடஉடலைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவையான வகையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அதனிடம் பற்றுக்கொள்ளக்கூடாது. இதற்கு யுத்த வைராக்கியம் என்று பெயர். உடலை உதாசீனம் செய்யக்கூடாது. நாம் ஒழுங்காக குளித்து உணவுண்டு உறங்க வேண்டும்.
—சுவாமி பிரபுபாதா

Flipkart.com
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

-சுவாமி விவேகானந்தர்

Flipkart.com
உனக்கு அமைதி வேண்டுமானால்....

உனக்கு அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைப் பார்க்காதே,
அதற்க்குப் பதிலாக உன் குற்றங்களைப் பார்
உலகம் முழுவதையுமே உனது சொந்தமாகக் கற்றுக் கொள்,
யாரும் அன்னியர் அல்ல மகளே! உலகம் முழுவதுமே உன் சொந்தம்தான்

அனுப்பியவர்
வரைகலை வித்தகர் தாமரைகுளம் அய்யப்பன்

Flipkart.com
தினமலர் இதழுக்கு நன்றி

ஆன்மிகம் இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 12-3-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு

Flipkart.com

மகத்துவம் தரும் மகா சிவ ராத்திரி விரதம்!
மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Flipkart.com
பழனியில் தைப்பூசம்

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் ணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்..
தைப்பூசத்தின் சிறப்புகள்:
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.`அருட்பெருஞ் ஜோதி - தனிப் பெருங்கருணை‘ எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச விரத முறை:
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
Flipkart.com
தைப்பூச திருவிழாவும், சிறப்புகளும்!

ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) வருவது தைப்பூசம். இந்த நாளில் எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முருகனுக்கு வேல் வழங்கிய நாள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.. கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது
தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.
கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும்
திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக்கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது
ஐதீகம்.

Flipkart.com
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்
* பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.
* நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும். *பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.
* ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
* பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.
* இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்குத் திறந்து விடுகின்றான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவனை இறைவன் திடீரென்று வேதனையைக் கொண்டு பிடிப்பான்.
* எந்தத் தலைவன் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.
* உமது நெருங்கிய நண்பரிடம் பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்.